
அல்லாஹ்வே உன் நல் அருளை
அனுதினம் நாமே வேண்டுகிறோம்
அல்-அஷ்ரப் உயர் கலைக்கூடம்
அறிவொளி பரப்பி உயர்த்திடவே
(அல்லாஹ்வே...)
மாணவராசான் ஊரவர் பெற்றோர்
மாண்புறும் உறவுகள் ஓங்கிடவே
பேணுதலோடுயர் ஒழுக்கமும் கல்வியும்
பிரியமுடன் எம்மில் நிலைத்திடவே
(அல்லாஹ்வே...)
பாசமுள்ளவர்கள் பழைய மாணவர்கள்
பரிவுடன் உதவிடும் தலைவர்கள் யாவரும்
நேசக் கரத்துடன் நீடு வாழ்ந்திட
நினைதருள் வேண்டி இறைஞ்சுகிறோம்
(அல்லாஹ்வே...)
நீர்வளம் நிலவளம் நெல்வளம் யாவும்
நிலைத்த இம் மாவடிப்பள்ளியிலே
கல்வி வளம் பெருகிச் சமூகம் உயர்வடைய
கருணை செய் ரஹ்மானே
(அல்லாஹ்வே...)
அல்லாஹ்வே உன் நல் அருளை
அனுதினம் நாமே வேண்டுகிறோம்
அல்-அஷ்ரப் உயர் கலைக்கூடம்
அறிவொளி பரப்பி உயர்த்திடவே
(அல்லாஹ்வே...)
மிக ஆழமான செறிவான கருத்துக்களை கொண்ட இக்
கீதமானது கலைமணி-ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை அவர்களினால்
இயற்றப்பட்டதாகும்.





