காரியப்பர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
அவர் 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி மாவடிப்பள்ளி கமு /அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தை நிறுவினார்.
காரியப்பர் உள்ளூர் அரசியலில் நுழைந்து கல்முனை நகர சபையின் தலைவரானார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை இலங்கை தமிழ் அரசு கச்சி வேட்பாளராக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தேர்தல் முடிந்த ஆறு மாதங்களிலேயே அவர் ஆட்சிக்கு மாறினார். அவர் நீதி அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில், இம்முறை லங்கா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காரியப்பர் 1960 இல் அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி ஜூலை 1960 நாடாளுமன்றத் தேர்தலில் ACIUF வேட்பாளராகப் போட்டியிட்டார். அவர் தோற்கடிக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலகொடபிட்டிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் ஊழல் குற்றவாளியாக காணப்பட்டார்.
1965 நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இம்முறை சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காரியப்பர் இரண்டாவது முறையாக மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் திரும்பினார். எவ்வாறாயினும், அவர் தனது பதவியை இழந்தார் மற்றும் தலகொடபிட்டி இலஞ்ச ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் குடிமை குறைபாடுகள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (1965 இன் இலக்கம் 14) இயற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.





