வரலாறு

எமது பாடசாலை மாணவன் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாம் சுற்றில் பங்கெடுக்க உள்ளார்

கமு அல்  அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் புதியஅதிபர்

dsc_0154-min.jpg
dsc_0154-min.jpg

கிழக்கு மாகானத்தின், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள , பொத்துவில் தேர்தல் தொகுதியின் , காரைதீவு பிரதேச செயலகத்தில் மாவடிப்பள்ளி என்னும் கிராமம் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளிகளையும், இயற்கை அழகையும் ஒருமித்தே கொண்டு இது காணப்படுகின்றது. கல்முனை, அம்பாறை பிரதான வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் இந்த அல் அஷ்ஃரப் மகா வித்தியாலயம் அமைந்து காணப்படுகின்றது.

இப்பாடசாலை 1945.06.25ம் திகதி கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.இப்பாடசாலையை புனர்நிர்மானம் செய்வதில் ஊர் மக்களும் சேர்ந்து பாடுபட்டனர். இப்பாடசாலை ஆரம்பத்தில் ஓலைகளாலும், கிடுகுகளாலும் அமையப் பெற்று குடிசையமைப்பிலேயே காணப்பட்டது. இது ஆரம்பத்தில் திண்ணைப்பள்ளி வடிவிலேயே காணப்பட்டது. இந்நேரத்தில் கல்முனையிலிருந்து நடந்து வந்து கிறிஸ்தவப் பாதிரியார் ஆன ஜி.எஸ். கதிரேசப்பிள்ளை பாடங்களை கற்பித்து வந்தார். பின்னர் பாடசாலையாக மாற்றம்பெற்றது. ஆரம்பத்தில் இப்பாடசாலையில் 66 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு கல்வி போதிக்கப்பட்டது. இந்த பாடசாலையின் முதல் மாணவர் செய்யது உஸைன் மௌலானா ஆவார்.

அந்த 66 மாணவர்களில்:

  • ஐந்தாம் வகுப்பில் - 01 மாணவன்
  • நான்காம் வகுப்பில் - 02 மாணவர்கள்
  • மூன்றாம் வகுப்பில் - மாணவர்கள் இல்லை
  • இரண்டாம் வகுப்பில் - 01 மாணவர்கள்
  • பாலர் மேற்பிரிவு - 11 மாணவர்கள்
  • பாலர் கீழ்ப்பிரிவு - 51 மாணவர்கள் இருந்தனர்.


மேலும் இம்மாணவர்களுக்கு அப்பாடசாலையிலேயே மதிய போஷனம் சமைத்து வழங்கப்பட்டது. மேலும் இப்பாடசாலையில் தளபாட வசதிகள் காணப்படவில்லை. மேலும் இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராக ஐ.எம்.ஐயுப் கடமையாற்றினார். மேலும் இப்பாடசாலையின் முதல் முதலாக சுதந்திர தின விழா 1948.02.11ம் திகதி கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஊர்வலம், விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள் போன்றன நடைபெற்றன.

இந் நிகழ்ச்சியில் கிராம வாசிகள் கலந்து கொண்டதுடன் தேனீர் வசதிகளும் செய்து கொடுத்தனர். அப்படி இருந்தும் இப்பாடசாலையில் அந்த ஊரவர்கள் ஆசிரியர்களால் கற்பிக்கப்படாமையால், இப்பாடசாலையின் வளர்ச்சி பல வருடங்கள் பின் தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. 1988ம் ஆண்டு இப்பாடசாலையின் வளர்ச்சியில் பொற்காலம் என்று குறிப்பிடலாம். காரணம் இந்த ஆண்டில் தான் இவ்வூரைச் சேர்ந்த ஆறு (06) ஆசிரியர்கள் இப்பாடசாலையில் நியமனம் பெற்றார்கள். இந்த நியமனத்தின் பிற்பாடு ஆரம்ப பாடசாலையாக இருந்த இப்பாடசாலையில் வகுப்புக்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது இது மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு காணப்படுகின்றது.

இரண்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு காணப்படுகின்ற இப்பாடசாலையில் நான்கு வகுப்பறைக் கட்டிடங்கள் காணப்படுகின்றன. இப்பாடசாலையில் புதிதாக மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ஆராதனை மண்டபமும் 1996 ம் ஆண்டில் நிர்மானிக்கப்ட்டுள்ளது. குறிப்பாக இப்பாடசாலைக்கு அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலான உதவி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரவசதி 01.09.1995ம் ஆண்டு மாணவர்களுக்கான குடி நீர்த்திட்ட வசதி போன்றவற்றிற்கு உதவி வழக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலை வைத்தியர் ஒருவரையும், நிருவாக சேவை உத்தியோகத்தர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் போன்றோரையும் உருவாக்கியுள்ளது. இப்பாடசாலையின் முதல் பட்டதாரி ஆசிரியராக வை . இஸ்மா லெவ்வை அவர்கள் ஆவர்.

இவ்வாறு இப்பாடசாலையில் வரலாறு பல சிரமத்தினைத் தாங்கிக் கொண்டு அதன் அபிவிருத்தியில் வீறு நடை போட்டுக் கொண்டு செல்கின்றது.